
நடிகர் சூரி ஒவ்வொரு நாளும் தன்னுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து, பொழுதை வீட்டில் கழிப்பதை பற்றி, பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இப்படி இவர் வெளியிடும் வீடியோக்களில் காமெடி மட்டும் இன்றி கருத்துக்களும் நிரையவே இருக்கிறது. முடிந்த வரை, வீட்டில் உள்ள நாட்களை குழந்தைகளுடன் செலவிட வேண்டும் என்றும், அப்போது தான் அவர்கள் நம்மை நண்பர்கள் போல் பார்ப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் பயமின்றி நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள் என பெற்றவர்களுக்கு பல்வேறு அறிவுரை கூறி வருகிறார்.
அந்த வகையில் கொரோனா - 11 ஆவது நாள் என்று குறிப்பிட்டு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் சூரி தன்னுடைய அப்பா, அம்மா, மற்றும் உறவினர்களின் புகைப்படங்களை தனது மகனுக்கும், மகளுக்கும் காட்டி, அவர்களை பற்றி தன்னுடைய குழந்தைகளுக்கு எடுத்து கூறுகிறார்.
மேலும் தனது திருமண நாளில் தனது தாயார் தான் தனக்கு தாலி எடுத்து கொடுத்ததாகவும் ‘தாயை விட மிஞ்சிய அய்யரும் இல்லை, ஆண்டவனும் இல்லை என்றும் எல்லாமே நமக்கு பெற்றவர்கள் தான் என்று தனது மகளிடம் கூறுகிறார்.
பின் ரசிகர்களை பார்த்தவாறு... ‘இந்த கொரோனா விடுமுறையில் நம்முடைய முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அதனை குழந்தைகளுக்கு காண்பித்து நம்முடைய முன்னோர் குறித்து அடுத்த சந்ததியினர்களிடம் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் நமது உறவுகள் நீடிக்கும் 'என்றும் சூரி கூறியுள்ளார். சூரியின் இந்த சூப்பர் வீடியோவிற்கு பலரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.