ராதாரவியை வீழ்த்த களம் இறங்கிய சின்மயி... வேட்புமனு தாக்கல் செய்ய போன இடத்தில் காத்திருந்த அவமானம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 30, 2020, 02:46 PM ISTUpdated : Jan 30, 2020, 02:49 PM IST
ராதாரவியை வீழ்த்த களம் இறங்கிய சின்மயி... வேட்புமனு தாக்கல் செய்ய போன இடத்தில் காத்திருந்த அவமானம்...!

சுருக்கம்

ஆனால் வடபழனி அலுவலகத்திற்கு சென்ற சின்மயியை உறுப்பினரே இல்லை எனக்கூறி டப்பிங் யூனியன் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  

பிரபல பின்னணி பாடகி சின்மயி, டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பல முன்னணி ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். வைரமுத்து மீது மீடூ புகார் கூறியதன் மூலம் இன்னும் பிரபலமானார். சின்மயின் இந்த குற்றச்சாட்டிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்தது. 

இதையும் படிங்க: நடிகை முதல் மா நித்தியானந்த மாயி ஆக மாறியது வரை... ரஞ்சிதாவின் அசத்தல் புகைப்படங்கள்...!

இதுபோதாது என்று டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி மீது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீடூ புகார் கூற, அதற்கு வக்காலத்து வாங்கிய சின்மயி, தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவி பற்றி எழுதி நாறடித்தார். இதனால் அன்று முதல் ராதாரவி, சின்மயி மோதல் சூடு பிடித்தது. 

சின்மயின் ட்வீட்டால் கடுப்பான ராதாரவி, சந்தா கட்டவில்லை எனக்கூறி 2018ம் ஆண்டு அவரை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார். இதனால் ஓராண்டுக்கும் மேலாக பாடகி வாய்ப்பும் கிடைக்காமல், டப்பிங் வேலையும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டார் சின்மயி. பொருத்தது போதும் பொங்கி எழு என்ற பாணியில், காத்திருந்து, காத்திருந்து நொந்து போன சின்மயி, டப்பிங் யூனியன் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியை நீக்கியது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 15ம் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும்  தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிட உள்ளார். எங்க மீண்டும் அவர் ஜெயித்துவிட்டால், டப்பிங் யூனியனுக்குள் போகவே முடியாதோ என்று எண்ணிய சின்மயிக்கு புதிதாக ஒரு ஐடியா உதித்தது.

நாமளே ஏன் டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டி போட கூடாதுன்னு முடிவு செய்தார். அதற்கான அதிரடி வேலையை ஆரம்பித்த சின்மயி, ராதாரவியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக டப்பிங் யூனியன் சென்றுள்ளார். ஆனால் வடபழனி அலுவலகத்திற்கு சென்ற சின்மயியை உறுப்பினரே இல்லை எனக்கூறி டப்பிங் யூனியன் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இதனால் டப்பிங் சங்க நிர்வாகிகளுக்கும், சின்மயி ஆதரவாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிக்காக காத்திருந்த சின்மயி, மிகவும் தாமதமானதால் அங்கிருந்த வேட்புமனு பெட்டியில் தனது மனுவை போட்டுவிட்டு சென்றுள்ளார். 

இதையும் படிங்க: குழந்தை கொடுக்கும் தாராள பிரபுவாக மாறிய ஹரிஷ் கல்யாண்... டீசரில் தனுஷ் ரசிகர்களுக்கு ஐஸ் வைத்து கலக்கல்...!

அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், வாக்களிக்க தகுதியான உறுப்பினர்கள் பட்டியலில் இருந்தும் சின்மயியின் பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது. இது தெரிந்தே மனு தாக்கல் செய்துள்ள சின்மயி, வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனில், மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளாராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!