
"அசுரன்" பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படமும் தியேட்டர்களில் மாஸ் காட்டி வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'D40', மாரி செல்வராஜ் உடன் 'கர்ணன்' ஆகிய படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பாலிவுட்டில் 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் எல் ராய், இவர் ஏற்கனவே தனுஷை வைத்து 'ரான்ஜ்னா' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கூட்டணி தான் தற்போது மீண்டும் கைகோர்த்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசத்தல் போட்டோஷூட்டுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போனா அவர் கூட அப்படியொரு டேட்டிங் போகணும்... தோனி பட நாயகியின் தீராத ஆசை...!
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகானும், முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷய்குமாரும் நடிக்க உள்ளனர். இதற்காக மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் ஒன்றில் தனுஷும், அக்ஷய் குமாரும் சாரா அலிகானின் கன்னத்தில் ஒரே நேரத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: வசூலில் தட்டித்தூக்கிய "பட்டாஸ்"... இன்று வரை தமிழகத்தில் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
மற்ற புகைப்படங்களில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடியும், தனுஷின் கன்னத்தில் அக்ஷய் குமார் தனது இருகைகளையும் வைத்துள்ளது போலவும் விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளனர். பூஷன்குமார் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், படத்திற்கு அட்ரங்கி ரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு தான் அக்ஷய்குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
மிகப்பெரிய பிரம்மாண்ட கூட்டணியில் உருவாக உள்ள இந்த படம் இந்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் தமிழில் வெளியான அசுரன் திரைப்படத்தை போல, இந்தியில் அட்ரங்கி ரே திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.