பாலியல் குற்றவாளி வைரமுத்துவை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தது ஏன்?...கமலை நோக்கி சீறும் பாடகி சின்மயி...

Published : Nov 09, 2019, 10:57 AM IST
பாலியல் குற்றவாளி வைரமுத்துவை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தது ஏன்?...கமலை நோக்கி சீறும் பாடகி சின்மயி...

சுருக்கம்

இது குறித்த தனது ட்விட்டர் பதிவில்,...பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் மிகவும் அச்சமாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.  

சுமார் ஓராண்டுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளுக்கு கவிஞர் வைரமுத்து அழைக்கப்படாமல் இருந்த நிலையில் அவரை தனது பிறந்தநாள் விழா மேடைக்கு கமல் வரவழைத்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது. பாலியல் குற்றவாளி வைரமுத்துவை கமல் தனது பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தது ஏன் என பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை பூஜாவை தொடர்ந்து தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கமல் கலந்துகொள்ளவைப்பது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் தற்போது அந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டது குறித்து பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில்,...பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் மிகவும் அச்சமாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

சின்மயியின் அப்பதிவுக்குக் கீழ் கமல்,ரஜினி, வைரமுத்து ஆகிய மூவருமே கடுமையாக விமரிசிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கமல் வட்டாரத்திலோ வைரமுத்துவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அவர் பாலசந்தரைக் காரணம் காட்டி தானாகவே வாண்டட் ஆக வண்டியில் ஏறிக்கொண்டு கமலின் மானத்தை வாங்கிவிட்டார் என்கிறார்கள்.

வைரமுத்துவை யார் ஆதரித்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு வம்பிழுக்கும் சின்மயி தனது ’பொன்னியின் செல்வன்’படத்தில் 12 பாடல்கள் எழுத வாய்ப்பளித்திருக்கும் மணிரத்னம் குறித்து மட்டும் மூச் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!
ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!