விஜய்சேதுபதி ஜெயிக்குறதுக்கு நாங்களும் முதுகு கொடுத்தோம்லா! இன்னைக்கு அந்த முதுகுலேயே குத்துறாரே அண்ணாச்சி: வடியாத வணிகர்களின் கோபம்.

By Selvanayagam PFirst Published Nov 9, 2019, 6:32 AM IST
Highlights

நந்தவனத்தில் ஓர் ஆண்டி! கதையாகிவிட்டது விஜய்சேதுபதியின் நிலைமை. ஆக்சுவலாக நந்தவனத்து ஆண்டி, கூத்தாடியதால் போட்டு உடைத்தார் பானையை. ஆனால் ‘கூத்தாடி’ என்று பாரம்பரிய கொச்சை வார்த்தையில் அழைக்கப்படும் ‘நடிகர்கள் பட்டாளத்தை’ சேர்ந்த விஜய்சேதுபதியோ வேறு ஒரு  காரியத்தை செய்யப்போ இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டு முழிக்கிறார். 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி! கதையாகிவிட்டது விஜய்சேதுபதியின் நிலைமை. ஆக்சுவலாக நந்தவனத்து ஆண்டி, கூத்தாடியதால் போட்டு உடைத்தார் பானையை. ஆனால் ‘கூத்தாடி’ என்று பாரம்பரிய கொச்சை வார்த்தையில் அழைக்கப்படும் ‘நடிகர்கள் பட்டாளத்தை’ சேர்ந்த விஜய்சேதுபதியோ வேறு ஒரு  காரியத்தை செய்யப்போ இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டு முழிக்கிறார். 


யதார்த்த கதைகளில், இமேஜெல்லாம் பார்க்காமல் செமத்தியாக தரையிறங்கி நடித்து மக்களின் கவனத்தை கவர்ந்து ‘மக்கள் செல்வன்’ எனும் அந்தஸ்தை கஷ்டப்பட்டு பிடித்தவர் விஜய் சேதுபதி. ஒரு ஹீரோ எனும் கட்டங்களுக்குள் எல்லாம் அமர்ந்து கொள்ளாமல் மக்களோடு மக்களாக ஜனரஞ்சமாக வலம் வருபவர். 


ஆனால் சமீபகாலமாக அவர் எடுக்கும் சில முடிவுகள் அவர் மீது மிகப்பெரும் விமர்சன புகைச்சலை கிளப்பியுள்ளன. இலங்கை கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரனின் (ஈழ தமிழர்களுக்கு எதிரானவராய் விமர்சிக்கப்படுபவர்) பயோபிக் படத்தில் நடிக்க சம்மதித்தது இவரது நல்ல இமேஜை உரசியது.
அதன் பின் உச்சமாக ‘மண்டி’ எனும் ஆன்லைன் ஆப் விளம்பரத்தில் நடித்து தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டார் விஜய்சேதுபதி. 

இந்த ஆப் மூலம் சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரம் சீர்குலையும், இதை விஜய்சேதுபதியே ப்ரமோட் செய்வதுதான் கருமம்! என்று பொங்கியுள்ளனர் வணிகர்கள். 
என்னதான் மண்டி ஆப் நிறுவன தரப்பில் இதற்காக சமாதான கொடிகள் பறக்கவிடப்பட்டு, ‘இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என சொல்லப்பட்டுவிட்டாலும் கூட வணிகர்கள் அடங்கியபாடில்லை. 

உள்ளே கனன்று கொண்டே இருக்கிறது நெருப்பு. 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளயனும், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவும் விஜய்சேதுபதியை செமத்தியாக உரசி தங்களின் கருத்துக்களை கொட்டியுள்ளனர். 

‘கதாநாயகன் அந்தஸ்தில் இருந்து வில்லனாக சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. சினிமாவை தவிர நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக மாறியிருக்கிறார். சில்லரை வணிகர்களுக்கும், நமது நாட்டுப் பொருளாதாரத்துக்கும் வில்லனாகி இருக்கிறார்.” என்று வெட்டியிருக்கிறார் வெள்ளையன்.
விக்கிரமராஜாவோ “விஜய்சேதுபதி ஒரு நல்ல நடிகர், நல்ல மனிதர். கடுமையாக உழைத்துதான் முன்னுக்கு வந்திருக்கிறார். அவர் மேலே வருவதற்கு நாங்களும் ஒரு காரணம்தான். 

எனவே அவர் எங்களின் அடையாளத்தை அழிக்கக்கூடிய வேலையில் இறங்கக்கூடாது என்பதே வணிகர்களின் எதிர்பார்ப்பு. 
கமர்ஷியலுக்கு அப்பாற்ப்பட்டவர், மனிதநேயம் மிக்கவர் என்று பெயரெடுத்திருக்கும் விஜய்சேதுபதி அதை இனிமேலும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.” என்றிருக்கிறார். 
அதெல்லாம் சரி, விஜய்சேதுபதியின் முன்னேற்றத்துக்கு நீங்களும் எப்படி காரணமுன்னு சொல்லவே இல்லையே அண்ணாச்சி!?

click me!