"ஸ்டார்ட்டிங் 250... டுடே ரன்னிங் 350..." இது, கைதியின் சக்சஸ் ஃபார்முலா!

By Selvanayagam PFirst Published Nov 8, 2019, 11:01 PM IST
Highlights

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் 'கைதி'. வித்தியாசமான கதைக்களத்தில், தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் ஆக்ஷன் படமாக வந்த இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. 
 
பாடல்களே இல்லாத படம் என்ற சிறப்புடன் வெளியான இந்தப் படத்தில், சாம் சி.எஸ்-யின் மிரட்டலான பின்னணி இசையும், சத்யன் சூரியனின் கண்களை மயக்கும் ஒளிப்பதிவும் பார்வையாளர்களை  கட்டிப்போட்டது. கார்த்தியுடன் நடித்த நரேன், கே.பி.ஒய். புகழ் தீனா, ஜார்ஜ் மரியம் ஆகியோரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. 

விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்தததால் 'கைதி' படத்திற்கு, ஆரம்பத்தில் 250 திரையரங்குகளே கிடைத்தன. இதனால், மிக குறைந்த தியேட்டர்களிலேயே வெளியான கைதி படம், ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், தற்போது, 3-வது வாரத்தில் 350 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதற்காக, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆதரவு அளித்த ரசிர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை, உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கைதி' படம், பாக்ஸ் ஆஃபிசில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இதன்மூலம், நல்ல கதையுடன் தரமான படமாக இருந்தால், எப்படிப்பட்ட சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதை தமிழ் திரையுலகிற்கு 'கைதி' படம் உணர்த்தியுள்ளது

click me!