ஆபத்தான நிலையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

Published : Mar 25, 2023, 10:06 AM IST
ஆபத்தான நிலையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

சுருக்கம்

கர்நாடக இசை கலைஞரும், பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ  நேற்று மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய தற்போதைய உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ் சினிமாவில் பல சூப்பர் மெலடி ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடல் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது. தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், என பல்வேறு மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், பல்வேறு பக்தி பாடல்களையும் பாடி உள்ளார்.

அதே போல் தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, போன்ற பலரது இசையிலும் பாடியுள்ளார். இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து நேற்று வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாம்பே ஜெயஸ்ரீ, நேற்று மாலை லிவர் பூல் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு... கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாக்கின. 

கதறி அழுத அம்மாவை... கண்ணீரோடு கட்டிப்பிடித்து தேற்றிய அஜித்! மனதை ரணமாக்கிய வீடியோ!

லண்டனில் உள்ள மருத்துவமனையில், ICU - பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பாம்பே ஜெயஸ்ரீக்கு, கீ ஹால் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இவருடைய தற்போதைய உடல் நிலை குறித்த தகவல் அவருடைய சமூக வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவில்...  மீண்டும் பாம்பே ஜெயஸ்ரீ பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும், லண்டனில் அவருக்கு துரித நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்ததால், தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் முழு ஓய்வில் இருப்பார் என தெரிவித்துள்ளனர். அதே போல் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை குறித்து, அடுத்தடுத்து பலர் போன் மூலம் விசாரித்து வரும் நிலையில்... இந்த காலகட்டத்தில் தனிமையை விரும்புவதாக கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர்.

அல்ட்ரா மாடர்ன் உடையில்... பட்டனை கழட்டி விட்டு ஹாலிவுட் ஹீரோயின் போல் போஸ் கொடுத்த சமந்தா! வேற லெவல் போட்டோஸ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?