மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் நிதின் - ராஷ்மிகா நடிக்கும் VNRTrio படத்தின் படப்பிடிப்பு!

By manimegalai aFirst Published Mar 25, 2023, 12:39 AM IST
Highlights

நிதின் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெங்கி குடுமுலா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும், #VNRTrio திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.
 

வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம்  எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும்  படங்கள் என்றால்  அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்த அறிவிப்பை, கலக்கலான நகைச்சுவையுடன்,  வேடிக்கை மிகுந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகசமாக நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்திருக்கின்றனர். இந்த பிரமாண்ட வெற்றிக் கூட்டணி  இணையும் இப்படத்தின் துவக்க விழாவில், மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டது பெரும் சிறப்பாக அமைந்தது.

படத்துவக்க விழாவில் முதல் காட்சிக்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார். கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் இந்த படத்தினை தயாரிக்கிறார்கள்.  முக்கிய கதாபாத்திரங்களில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களைச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். நடா கிரீட்டி ராஜேந்திர பிரசாத் மற்றும் வெண்ணெலா கிஷோர் ஆகியோர்  இப்படத்தில்  பங்குபெறவுள்ளனர்.


 
ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ராம் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். படத்தின் மற்ற விவரங்கள் ஒவ்வொன்றாகப் பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
 

click me!