லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கும் 'தீராக் காதல்'!

Published : Mar 24, 2023, 09:33 PM IST
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய் இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்கும் 'தீராக் காதல்'!

சுருக்கம்

லைகா நிறுவனம், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.  

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். 

ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல்.. பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குனர்! கண்டுகொள்ளாத திரையுலகம்!

ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இந்த திரைப்படத்தின்  இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும்,  தோற்றமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்திருக்கிறது.

'பொன்னியின் செல்வன் 2' ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இதனிடையே தமிழகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்', 'தலைவர் 170' என பிரம்மாண்ட பொருட் செலவில் திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்