ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல்.. பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குனர்! கண்டுகொள்ளாத திரையுலகம்!

By manimegalai a  |  First Published Mar 24, 2023, 9:09 PM IST

தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி ராயை அறிமுகப்படுத்திய இயக்குனர் இன்று, ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல், பிச்சை எடுக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 


சினிமா என்பது ஒரு மாயை என கேள்வி பட்டிருப்போம். இது பலரது வாழ்க்கையை உயர்த்தியும் உள்ளது. பலரை அதள பாதாளத்தில் தள்ளியும் உள்ளது. சினிமா மீது கொண்ட ஆசையால் ஊரை விட்டு ஓடி வந்து வெற்றி கண்ட நடிகர்களும், இயக்குனர்களும், 100-ல் 5 பேர் தான்.  பலர் சினிமா ஆசையில், ஊரை விட்டு ஓடி வந்து மீண்டும்... சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், அலைந்து திரிந்து, மன உளைச்சலில் பைத்தியக்காரர்களாக மாறிய பிச்சையெடுக்கும் நிலைக்கு கூட தள்ளப்பட்டுள்ளனர். அப்படி சினிமாவின் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசையில் தன்னுடைய சொந்த ஊரை விட்டு விட்டு சென்னை வந்தவர் தான் செல்வேந்திரன்.

Tap to resize

Latest Videos

ஆரம்ப காலத்தில் முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக வாய்ப்பு தேடிய இவருக்கு, இயக்குனர் இமையம் பாரதிராஜா வாய்ப்பு கொடுக்காத நிலையில், இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காதலன், ஜீன்ஸ், இந்தியன், போன்ற அடுத்தடுத்த படங்களில் பணியாற்றினார். சுயமாக திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்த செல்வேந்திரன், அதன்படி படம் இயக்க ஒரு கதை ஒன்றை தயார் செய்து கொண்டு, தயாரிப்பாளர்களை தேடிய இவருக்கு... தயாரிப்பாளரும் கிடைத்தார்.

'பொன்னியின் செல்வன் 2' ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை ரம்பா முக்கிய வேடத்தில் நடித்த, படம் ஒன்றில் லட்சுமி ராய்யை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தவரும் செல்வேந்திரன் தான். 'ஒரு காதலன் ஒரு காதலி' என பெயரிடப்பட்ட இந்த படம், எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில், மீண்டும் படம் இயக்க வாய்ப்பு தேடியவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. 

தற்போது ஒரு வேலை சோற்றுக்கு கூட வழியில்லாமல், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள செல்வேந்திரன்... இந்த நிலையிலும்,  திரையுலகில் சாதனை புரிய வேண்டும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருவதாக கூறுகிறார். தங்க இருப்பிடம், நல்ல உடை கூட இல்லாமல்... தெருவில் வசித்து வரும் இந்த திறமையான இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும், திரையுலகம் ஆதரவுக்கரம் நீட்டி வாழ்வளிக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இவரை பற்றி நன்கு அறிந்த, இயக்குனர் ஷங்கர், ராய் லட்சுமி, போன்ற பிரபலங்கள் இவருக்கு உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்குனராக அவதாரம் எடுக்கும் மனோஜ் பாரதிராஜா.! பிள்ளைக்காக 80 வயதில் பாரதிராஜா எடுத்த முடிவு!

click me!