நடிகர் அஜித்தின் தந்தை இன்று வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில், அஜித் தன்னுடைய அம்மாவை கட்டியணைத்து தேற்றிய காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், அடுத்ததாக தன்னுடைய 62-ஆவது படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இன்னும் சில தினங்களில் அஜித்தின் அடுத்த பட அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களை, இன்று காலை அஜித் தந்தை மரணம் குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியடைய செய்தது. அஜித்தின் அப்பா சுப்ரமணியன் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்தார்.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, உடல்நல குறைவு ஏற்பட்டபோது, பக்கவாத பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை அஜித், தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வைத்து, கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். 85 வயதாகும் சுப்ரமணியன் இன்று காலை உயிரிழந்த தகவல், வெளியான பின்னர் அஜித் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றும் வெளியானது.
இதில் குறிப்பாக "எங்கள் தந்தையாரின் இறுதிச்சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழத்தையும் புரிந்து கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும் இறுதிச் சடங்கு தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக் கொள்கிறோம்". என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இயக்குனராக அவதாரம் எடுக்கும் மனோஜ் பாரதிராஜா.! பிள்ளைக்காக 80 வயதில் பாரதிராஜா எடுத்த முடிவு!
இதை தொடர்ந்து, அஜித்தின் அப்பா சுப்ரமணியத்தின் உடல் 12:15 மணியளவில் ஊர்வலம் எடுத்துவரப்பட்டு பெசன்நகர் மின் மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது. போலீஸார் பாதுகாப்புடன் நடந்த இந்த இறுதி நிகழ்ச்சிகளில் அஜித், ஷாலினி, அஜித்தின் சகோதரர்கள் ஆகியோருடன் அம்மாவும் கலந்துகொண்டார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருந்த அஜித்தின் அம்மாவை, ஷாலினி தான் கை தாங்களாக பிடித்து வந்தார்.
#Breaking மூலையில் ரத்த கசிவு... கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ!
தகனம் செய்யப்படுவதற்கு முன்பு இறுதியாக தனது கணவரின் முகத்தைப் பார்த்து அஜித்தின் தாயார் கதறி அழுதார். அதை பார்த்து பரிதவித்து போன அஜித் அம்மாவை கட்டியணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது அஜித்தும் கண் கலங்கி அழுதார். இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் மனதையும் இந்த காட்சி ரணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay Strong Sir 😔💔. pic.twitter.com/JvR68NQHrp
— KUMAR😉hyped for D50&VC2 (@Kumardaa2)