ஐயோ பாவம்... வலியால் இப்படி புலம்புறாரே சிம்பு! வைரலாகும் வீடியோ..!

Published : Mar 08, 2021, 01:08 PM IST
ஐயோ பாவம்... வலியால் இப்படி புலம்புறாரே சிம்பு! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

நடிகர் சிம்பு பயிற்சியாளருடன், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது வலியால் புலம்பி தள்ளும் வீடியோ, ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

நடிகர் சிம்பு பயிற்சியாளருடன், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது வலியால் புலம்பி தள்ளும் வீடியோ, ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட ரியோ ராஜ் மகளின் முதல் பிறந்தநாள்..! வைரல் போட்டோஸ்..
 

இந்த மாதத்திலேயே 'மாநாடு' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த கையோடு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்:முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்!
 

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் சிம்பு, உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய பின்னர் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய பயிற்சியாளர் உடன் இணைந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட, அதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் பயிற்சியாளருடன் சிம்பு தீவிரமாக ஒர்க்கவுட் செய்கிறார். பின்னர் பயிற்சியாளரை பார்த்து உனக்கு லவ்லி மேன்...  எனக்கு எங்க லவ்லி? என வலியால் சலித்துக் கொண்டு கூறுவது இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்: அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்த ரஜினி - கமல் பட ஹீரோயின்!
 

'மாநாடு' படத்தை தொடர்ந்து 'பத்து தல' படத்திலும்,  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்
Top 5 Movies : 2026ல் அதிக வசூலை வாரிசுருட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?