பாஜகவில் இணைந்த முன்னணி நடிகர்!

By manimegalai aFirst Published Mar 8, 2021, 11:14 AM IST
Highlights

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் 'யாகாவாராயினும் நாகாக்க' ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.
 

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் 'யாகாவாராயினும் நாகாக்க' ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.

80 களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'குரு' என்ற படத்திலும் 'யாகாவராயினும் நாகாக்க' என்ற தமிழ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் எம்பியாக இருந்தவர்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரது பெயர் அடிபட்டதால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன், மும்பையில் மிதுன் சக்ரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. அதனால் மிதுன் சக்ரவர்த்தி, பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் செய்திகள்: அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்த ரஜினி - கமல் பட ஹீரோயின்!
 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஜக பொதுச்செயலாளர் கைலஷ் விஜய் வர்கியாவை மிதுன் சக்கரவர்த்தி சந்தித்தார். அப்போது  அப்போது அவர் பாஜகவில் இணைந்தார். மேலும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, பாஜகவுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி நேற்று கொல்கத்தாவுக்கு வந்து கொல்கத்தாவின் படை அணிவகுப்பு மைதானத்தில் அவரது பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்: 'தல' போல வருமா... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அஜித்!
 

பிரதமர் மோடி அந்த மைதானத்திற்கு வருவதற்கு முன்பு அங்கு, மிதுன்  சக்கரவர்த்தியும் வந்திருந்தார். பின்பு பிரதமர் மோடி பொது பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார் பின், மிதுன் சக்கரவர்த்தி பாஜகவுக்கு வரவேற்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!