
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. தேர்தலில் போட்டியிடவும், அரசியல்வாதிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளவும், பிரபலங்கள் பலர் தங்களை, தங்களுக்கு விருப்பமான அரசியல் காட்சிகளில் இணைத்துக் கொண்டு பணியாற்ற துவங்கிவிட்டனர். அந்த வகையில், தற்போது 80 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ராதா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய, 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராதா தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.
இவர் நேற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அமித்ஷாவும், நடிகை ராதாவிற்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி, அவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
ஏற்கனவே பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றிவரும், நடிகை குஷ்பூ, மற்றும் கௌதமி ஆகியோர்... வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகை ராதாவும் கேரளா மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராதாவை தொடர்ந்து, அமித்ஷா முன்னிலையில், 'பாட்ஷா' உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்துள்ள தேவனும் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.