தளபதி 65 படத்திற்காக ரஷ்யா பறந்த இயக்குனர் நெல்சன்! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!

By manimegalai aFirst Published Mar 7, 2021, 5:27 PM IST
Highlights

கடந்த வருடமே வெளியாக வேண்டிய 'மாஸ்டர்' திரைப்படம் கொரோனா பிரச்சினை காரணமாக பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து இருந்த இந்த படத்தில், ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், விஜய் டிவி தீனா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 
50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம், தற்போது 50 நாட்களை கடந்து சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் உலக அளவில் சுமார் 220 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின், தளபதி விஜய் தன்னுடைய 65வது படத்தை, 'கோலமாவு கோகிலா', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக, முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65 வது படத்தின், முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் லொகேஷன் பார்ப்பதற்காக இயக்குனர் நெல்சன் தற்போது ரஷ்யா பறந்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட, அதனை விஜய் ரசிகர்கள் தளபதி 65 படத்திற்கான அப்டேட் கிடைத்ததாக நினைத்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து வருகிறார்கள். மார்ச் மாதம் துவங்க உள்ளதாக கூறப்பட்ட தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!