இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 'என்ஜோய் எஞ்சாமி' பாடல்..! #வீடியோ

Published : Mar 07, 2021, 02:26 PM IST
இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 'என்ஜோய் எஞ்சாமி' பாடல்..! #வீடியோ

சுருக்கம்

ரவுடி பேபி புகழ்,  தி பாடி, நடித்துள்ள 'என்ஜோய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

ரவுடி பேபி புகழ்,  தி பாடி, நடித்துள்ள 'என்ஜோய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அறிவு இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் வழக்கமான பாடல்களை போல் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

இந்த பாடலின் பாடலாசிரியர் மற்றும் ராப் சிங்கருமான அறிவு இந்த ஆல்பம் பாடலின் தி உடன் சேர்ந்து நடித்துள்ளார். அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை இந்த வரிகள் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. ராப், மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்த காம்போவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. தி - அறிவு இந்த பாடலை பாடியுள்ளது அல்டிமேட்.

விதவிதமான தோற்றத்தில் தோன்றி, இந்த பாடலை... உழைக்கும் விவசாய மக்களுக்கு அர்பணித்துள்ளனர். இந்த பாடலை இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Aamir Khan: 61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்..! VVIPகளுக்கு மட்டும் தான் அழைப்பாம்..
Ethirneechal Thodargiradhu : கம்பி எண்ணப்போகும் ஜனனி... தர்ஷினியால் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்