உயிர் பிழைக்க உதவிய விஜய் சேதுபதி..! வித்தியாசமாக நன்றி தெரிவித்த விஜே.லோகேஷ்! வைரல் வீடியோ...

Published : Mar 07, 2021, 06:15 PM ISTUpdated : Mar 07, 2021, 06:16 PM IST
உயிர் பிழைக்க உதவிய விஜய் சேதுபதி..! வித்தியாசமாக நன்றி தெரிவித்த விஜே.லோகேஷ்! வைரல் வீடியோ...

சுருக்கம்

கடந்த ஆண்டு, பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் லோகேஷ் பாபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அவர் உயிர்பிழைக்க உதவிய, நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  

கடந்த ஆண்டு, பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் லோகேஷ் பாபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அவர் உயிர்பிழைக்க உதவிய, நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகள்: 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலின் முக்கிய பிரபலம் மாற்றமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

'ஆதித்யா' தொலைக்காட்சியில், காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் பாபு. ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு திடீரென கடந்த ஆண்டு ஸ்ட்ரோக் ஏற்பட்டு இடது கால், மற்றும் இடது கை செயலிழந்து போனது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர்.  அவரது சிகிச்சைக்கு பல லட்சம் தேவைப்படுவதாக கூறியதை தொடர்ந்து,  நண்பர்கள் பலர் சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த நடிகர் விஜய்சேதுபதி, லோகேஷ் பாபுவை நேரில் சந்தித்து அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்:புதிய கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழுக்கு சந்தானம் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!
 

பின்னர் முதற்கட்ட சிகிச்சை முடிந்த பின்னர், மீண்டும் மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பூரண நலம் அடைந்துள்ள லோகேஷ், அடுத்ததாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் தயாராகிவிட்டார். இந்நிலையில் தன்னுடைய மருத்துவ செலவுகளை எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் ஏற்றுக் கொண்டு உதவிய, நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது குடும்பத்தினர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து, அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி வித்தியாசமாக தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: மொட்டை மாடியில் நின்று கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..! ஸ்லீவ் லெஸ் உடையில் சொக்க வைக்கும் போட்டோஸ்!
 

இது குறித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அப்போது விஜய் சேதுபதி கேக் வெட்டும் போது நீ நன்றாக இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியத்துடன் எல்லோரையும் சிரிக்க சிரிக்க வைக்க வேண்டும் என கூறிக் கொண்டே கேக் வெட்டி அவருக்கு  ஊட்டிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?