சிம்பு படத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் துண்டாக தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்

Published : Sep 15, 2022, 01:57 PM IST
சிம்பு படத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் துண்டாக தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்

சுருக்கம்

சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லி பூ பாடல் ட்ரெண்டாகி வருகிறது.

இரண்டு பாகமாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள வெந்து தணித்தது காடு படத்தின் முதல் பகுதி இன்று திரையரங்குகளுக்கு வந்து உள்ளது. கேங்ஸ்டர் திரைப்படம் ஆன இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு - கௌதம் மேனன் கூட்டணி அமைந்துள்ளது. இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி கொடுத்துள்ளார்.

படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  நெல்லையில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்கிற இளைஞர் பிழைப்புக்காக மும்பை சென்று அங்குபடும் இன்னல்களும் பின்னர் அவரே மிகப்பெரிய கேங்ஸ்டாராக உருவெடுப்பதையும் கதைக்களமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இன்று அதிகாலை முதல் காட்சிப்படுத்தப்படும் வெந்து தணிந்தது காடு படம் தொடர்ந்து  பாசிட்டிவ் விமர்சங்களை பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...இருள் அண்ட வாய்ப்பே இல்லை..நாட்டாமை...சின்னத்தம்பியுடன் வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

ஐசரி கணேஷ் தயாரிப்பான இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.  படத்திற்கு தாமரை பாடல் வரிகளை இயற்றி உள்ளார். அதோடு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் முன்னதாக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கும் மாபெரும் வரவேற்பு இருந்தது. அதே அளவு வரவேற்பு தற்போது படத்திற்கும் கிடைத்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...VTK review : "விமர்சனங்களை கேட்டு படம் பார்க்க காத்திருக்கிறேன்"..சிம்பு படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ என்னும் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு மிகப்பெரிய உயிர்ப்பாக இந்த பாடல் அமைந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தாமரை வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் மதுஸ்ரீ குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு...HBD Ramya Krishnan : சிவகாமி தேவியாய் மனங்களில் நின்ற ரம்யா கிருஷ்ணன்!ஸ்ரீதேவிக்கு பதில் இவர் நடித்த காரணம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!