சிம்பு என்றாலே பிரச்சனை என்கிற காலம் தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. மாதத்தில் இரண்டு முறையாவது மீடியாக்கள் வாயிக்கு தீனி போட்டு வந்த சிம்பு 'பீப்' சாங் பாடல் சர்ச்சைக்கு பின் ஒட்டுமொத்தமாக ஆளே மாறிவிட்டார்.
கரெக்ட் டைம்முக்கு ஷூட்டிங், பின் எப்போதாவது நண்பர்களுடன் என் ஜாய்மென்ட் அதுவும் வீட்டில் தான் என பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
மேலும் சிம்பு எப்படி பட்ட சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு எப்போதுமே குறைந்தது இல்லை. குறிப்பாக சிம்புவுக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.
சிம்புவை பற்றி பல thagaval வெளியாகி இருந்தாலும், அவருடைய சிறந்த குணம் தான் அவரை தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நிலைக்க வைத்துள்ளது என கூறலாம். தன்னுடைய ரசிகன் திருமணம் என்றால்... அனைவரும் இருக்கும் நேரத்தில் அவர்களை சென்று வாழ்த்தாமல் நடு இரவில் கூட நேரடியாக சென்று தன்னுடைய ரசிகருக்கு வாழ்த்து கூறுவார்.
இந்நிலையில் தற்போது சிம்பு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடப்போவதாக ஒரு தகவல் பரவியது.
இதனால் தற்போது சிம்புவுக்கு ஆதரவாக ம் சமூக வலைத்ததள ரசிகர்கள் பலர் வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் ... ரெட் கார்டு போடக்கூடாது என குரல் கொடுத்து வருகிறார்கள்.
சிம்பு, காத்ரீனா தெரசா, மேகா ஆகாஷ் , மகத், ரம்யா கிருஷ்ணன் , யோகிபாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.