சுதா கொங்கராவுடன் இணையும் சிம்பு...எந்த படத்தில் தெரியுமா?

Published : Oct 21, 2022, 12:14 PM ISTUpdated : Oct 21, 2022, 12:50 PM IST
சுதா கொங்கராவுடன்  இணையும் சிம்பு...எந்த படத்தில் தெரியுமா?

சுருக்கம்

ஆக்ஷன் படங்களில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கேஜிஎப் தயாரிப்பு - சுதா கொங்கரா உடனும் சிம்பு இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

தேசிய விருது இயக்குனராக வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் சுதா கொங்கரா ரெட்டிக்கு  சமீபத்தில் தான்  சூரரை போற்று படத்திற்காக  தேசிய விருது கிடைத்தது. சிம்பிளிஃபைங்  டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இதில் சூர்யா, "மாறன்" என்கிற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருந்தார் இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளியும் துணை வேடங்களில் கருணாஸ் உள்ளிட்டோரும் தோன்றியிருந்தனர்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வெற்றியை கண்டன. ஆனால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அமேசான் ப்ரைம் வீடியோவில் 2020 ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பாக இந்த படம் ஒளிபரப்பப்பட்டது. ஓடிடியில் வெளியாகி  இருந்தாலும் திரையரங்கையை விட அதிக வரவேற்பு பெற்றிருந்தது இந்தப் படம். முன்னதாக இணையதளத்தில் வெளியானதால் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு...‘பிரின்ஸ் vs சர்தார்’ தீபாவளி ரேஸில் வென்றது யார்?... யாருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது? - வாங்க பார்க்கலாம்

இதையும் மீறி தற்போது தேசிய விருதை வென்று மிகப்பெரிய சாதனையை உடைத்துள்ளது சூரரை போற்று இந்த படத்திற்கான ஐந்து விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பலமுரளியும்,  சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் குமாரும், சிறந்த படத்திற்கான விருதை ஜோதிகாவும், சிறந்த திரைக்கதைக்காண விருதை சுதா கொங்கார ரெட்டியும் பெற்றிருந்தனர். 

இதையடுத்து சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை தற்போது சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்த படத்தில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்க சூர்யா ,காமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது. தை இந்நிலையில் அடுத்ததாக கே ஜி எஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் சுதா கொங்கரா இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்,  உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்க உள்ளதை உறுதிப்படுத்தி இருந்தது. அதோடு சுதா கொங்கரா உடன் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் எங்களின் எல்லா படங்களையும் போலவே இதுவும் உங்களை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதையும் படியுங்கள்... தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

இந்நிலையில்  இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது அடுத்த ஆண்டு படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் சிம்புவின் வெந்து தணிந்தது காடு என்னும் படம் வெளியாகியது. படம்  நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து இளைஞன் மும்பைக்கு சென்று அங்கு கேங்ஸ்டர் ஆக உருவெடுக்கும் கதைக்களத்தை கொண்ட படம் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்து விட்டது. இதையடுத்து ஆக்ஷன் படங்களில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,கேஜிஎப் தயாரிப்பு - சுதா கொங்கரா உடனும் சிம்பு இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!