கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்துச் சென்ற கணவர்... இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

Published : Apr 18, 2023, 03:24 PM IST
கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்துச் சென்ற கணவர்... இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

சுருக்கம்

கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகையை அவரது கணவர் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஈ படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சனா கான். இதன்பின் சிம்பு நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு ரிலீசான சிலம்பாட்டம் படம் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சனா கான். இப்படமும் ஹிட் ஆனதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

அதன்படி ராதாமோகன் இயக்கிய பயணம், பரத் ஜோடியாக தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களில் நடித்த சனா கான், கடைசியாக தமிழில் தலைகாட்டிய படம் அயோக்கியா. இப்படத்தில் இடம்பெறும் வேறலெவலு என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் சனா கான். இதுதவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் சனா கான் நடித்துள்ளர்.

இதையும் படியுங்கள்.... ராஜ ராஜ சோழன் இந்துவா? வெற்றிமாறனால் கிளம்பிய சர்ச்சைக்கு முதன்முறையாக விளக்கம் அளித்த மணிரத்னம்

இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு முஃப்தி அனஸ் சையத் என்கிற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை சனா கான், தனது கணவரின் தொழிலை கவனித்து வருகிறார். தற்போது நடிகை சனா கான் கர்ப்பமாக உள்ளார். இவர் சமீபத்தில் தனது கணவருடன் மும்பையில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் சனா கானை அவரது கணவர் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் இப்படியா நடந்துகொள்வது என சனா கானின் கணவரை இணையவாசிகள் வறுத்தெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சனா கான், எனக்காக அக்கறை எடுத்துக்கொண்டதற்கு நன்றி, எங்களது கார் டிரைவருக்கு போன் போகவில்லை. நீண்ட நேரமாக அங்கு நின்றதால் எனக்கு வேர்த்துக்கொட்டியது. இதனால் எனக்கு அசவுகரியமாக இருந்தது. அதனால் தான் என்னை என் கணவர் அங்கிருந்து வேகமாக அழைத்துச் சென்றார். மற்றபடி எதுவும் இல்லை” என கூறினார்.

இதையும் படியுங்கள்.... 52 வயசாகுது; நான் கும்முனு இருக்கேனா! ‘சவுண்டு சரோஜா’வாக மாறி ஆபாச மெசேஜ் அனுப்பியவரை வெளுத்துவாங்கிய ஐஸ்வர்யா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!