ஒரே நாளில் சிம்புவை சரித்திரத்தில் இடம்பிடிக்க செய்த ரசிகர்கள்...

 
Published : Apr 20, 2017, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஒரே நாளில் சிம்புவை சரித்திரத்தில் இடம்பிடிக்க செய்த ரசிகர்கள்...

சுருக்கம்

simbu fans celebrate aaa movie

சிம்பு நடித்து வரும் 'AAA' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும்  என்றும், சிங்கள் டிராக் பாடல் விரைவில் வெளிவர இருப்பதாக நேற்று வெளியான தகவலால் ரசிகர்கள் குஷியாகி, இந்த சந்தோஷத்தை ட்விட்டரில் தெறிக்கவிட்டுள்ளனர்.

சிம்புவின் ரசிகர்கள் இதுகுறித்து சுமார் 20 ஹேஷ்டேக்குகள் ஏற்படுத்தி கிட்டத்தட்ட அனைத்தையும் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு பாகமாக வெளிவரவுள்ள 'AAA' படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஆன்மீகம் கலந்த ஒரு பாடல் இருப்பதாகவும், சிம்புவே எழுதியுள்ள இந்த பாடலின் ஒருசில வரிகளும் நேற்று சமூக இணையதளங்களில் வெளியாகியது. 

அந்த வரிகள், 'யாருடா நான்னு கேட்பவன் புத்திசாலிடா, நான் யாரு தெரியுமான்னு கேட்பவன் கோமாளிடா' என்றும் வருகிறது. இந்த வரிகளும் நேற்று டிரெண்டில் வந்தவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதூ.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, நீது சந்திரா, சனாகான், மகத், விடிவி கணேஷ், கோவை சரளா, ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!