சிம்புவிற்காக இஸ்லாமிய பெயர் தேடும் வெங்கட் பிரபு.... போட்டி, போட்டு ஆர்வம் காட்டும் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 18, 2020, 04:02 PM IST
சிம்புவிற்காக இஸ்லாமிய பெயர் தேடும் வெங்கட் பிரபு.... போட்டி, போட்டு ஆர்வம் காட்டும் ரசிகர்கள்...!

சுருக்கம்

ஆனால் அந்த லிஸ்டில் சிம்பு பெயர் மிஸ்ஸிங், அதனால் செம்ம அப்செட்டில் இருந்த STR புள்ளிங்கோவை குஷியாக்கும் விதமாக வெங்கட் பிரபு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கார். 

2018ம் ஆண்டு சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் "மாநாடு" படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இடையே கால்ஷீட் சொதப்பல் காரணமாக சிம்புவை படத்தில் இருந்து நீக்கியதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. இதனால் கடுப்பான சிம்பு "மகா மாநாடு" என்ற படத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து தயாரிப்பாளருக்கும்,  சிம்புவிற்கும் இடையே நடைபெற்ற பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு "மாநாடு" படத்தில் நல்ல பிள்ளையாக நடிப்பதாக ஒப்புக்கொண்டார் சிம்பு என்ற எஸ்டிஆர் பேன்ஸை செம்ம ஹாப்பியாக்கியது. இது எல்லாம் பழைய கதை. புதுகதை என்னனா. "மாநாடு" படத்தில் சிம்பு முஸ்லீம் கேரக்டரில் நடிக்க உள்ளாராம். 

இதையும் படிங்க: "தலைவி"யின் செல்வாக்கை ஒரே நாளில் தூக்கி நிறுத்திய தலைவர்... யூ-டியூப் ட்ரெண்டிங்கில் டாப்..!

நேற்று ''மாநாடு'' படத்தில் பணியாற்ற உள்ள டெக்னிஷீயன்கள் மற்றும் நடிகர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அந்த லிஸ்டில் சிம்பு பெயர் மிஸ்ஸிங், அதனால் செம்ம அப்செட்டில் இருந்த STR புள்ளிங்கோவை குஷியாக்கும் விதமாக வெங்கட் பிரபு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கார். 

இதையும் படிங்க: கர்நாடகாவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்... வசூலில் தட்டித்தூக்கும் "தர்பார்"...!

அதில், மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமியராக நடிக்க உள்ளதாகவும், அதற்கான பெயரை ரசிகர்களே பரிந்துரைக்கலாம் என்றும் கூறியுள்ளார். அப்படி எந்த ரசிகர் கூறும் பெயர் சிம்புவிற்கு வைக்கப்படுகிறதோ, அவர் ஒரு நாள் முழுவதும் மாநாடு ஷூட்டிங் செட்டில் இருக்கலாம் என்ற அதிரடி ஆபரையும் கொடுத்துள்ளார். 

இதை கேட்ட சிம்பு ரசிகர்கள் பாட்ஷா, குலாம் நபி ஆசாத், மாலிக், சாகிப், இப்ராகிம், அப்துல் கலாம், காதர்,  அப்துல் ராயீஸ் ஏன் சிலர் ஓசாமா பின்லேடன் பெயரைக் கூட பரிந்துரைத்துள்ளனர். அதில் வெங்கட் பிரபு எதை தேர்வு செய்யப்போகிறார்  என பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?