ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு சொல்லாமல் எஸ்கேப் ஆன சிம்பு...வயிற்றில் நெருப்பைக்கட்டிக் காத்திருக்கும் தயாரிப்பாளர்...

Published : Jul 29, 2019, 11:13 AM IST
ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு சொல்லாமல் எஸ்கேப் ஆன சிம்பு...வயிற்றில் நெருப்பைக்கட்டிக் காத்திருக்கும் தயாரிப்பாளர்...

சுருக்கம்

சிம்புவை வைத்துப் படம் தயாரிப்பவர்கள் அந்தப் படம் ரிலீஸாகும் வரை நிம்மதியாகத் தூங்கமுடியாது என்கிற நியதிப்படி அவரை வைத்து படமெடுக்கும் கன்னட தயாரிப்பாளர் ஒருவரும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருப்பதாக அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

சிம்புவை வைத்துப் படம் தயாரிப்பவர்கள் அந்தப் படம் ரிலீஸாகும் வரை நிம்மதியாகத் தூங்கமுடியாது என்கிற நியதிப்படி அவரை வைத்து படமெடுக்கும் கன்னட தயாரிப்பாளர் ஒருவரும் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருப்பதாக அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார்.

இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 இல் தொடங்கியது.படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில், பலத்த காற்று, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் கனமழை எல்லாவற்றையும் நாங்கள் இன்று சந்தித்தாலும் நாங்கள் பின்வாங்கவில்லை, முன்னோக்கி சென்றுள்ளோம் என்று கவுதம்கார்த்திக் சொல்லியிருந்தார்.

சிம்புவும் அவரும் படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டார்.இதனால் எல்லாம் நன்றாகப் போகிறதென மகிழ்ச்சியாக இருந்தாராம் தயாரிப்பாளர்.அந்த மகிழ்ச்சி சிலநாட்கள் கூட நீடிக்கவில்லையாம். ஒரு வாரம் வரை நடித்த சிம்பு, அதன்பின் எதுவும் சொல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டாராம்.சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாவற்றையும் ஒரேமூச்சில் எடுத்துவிடத் திட்டமிட்டிருந்த படக்குழு சிம்பு இப்படிச் சொன்னதால் அதிர்ச்சியானதாம்.ஆனாலும் அவரை வற்புறுத்த முடியாதே, அதனால் படக்குழு அமைதியாக இருந்ததாம்.அப்போது புறப்பட்டு வந்த சிம்பு அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது வைக்கலாம் என்று சொல்லாமல் இருக்கிறாராம்.இதனால், மொழிமாற்றுப் படம் தானே? வேகமாக எடுத்து முடித்து வெளியிட்டுவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர் பரிதவித்துப் போயிருக்கிறாராம். இதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த ‘மாநாடு’படம் என்ன நிலையில் இருக்கிறதென்று யாருக்கும் தெரியவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!