’இன்னொரு அக்கா வனிதா விஜயகுமார் எங்கே பாஸ்?’...அருண்விஜயைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..

By Muthurama Lingam  |  First Published Jul 29, 2019, 10:52 AM IST

ட்விட்டர் பக்கத்தில்  தனது ஐந்து சகோதரிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களை நடிகர் அருண் விஜய் வெளியிட்டிருப்பது வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. ‘அப்பா மாதிரி அக்கா வனிதா விஜயகுமாரை கைவிட்டுட்டீங்களே பாஸ்’ என்று அருணை வலைதளவாசிகள் ஓட்டி வருகிறார்கள்.


ட்விட்டர் பக்கத்தில்  தனது ஐந்து சகோதரிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களை நடிகர் அருண் விஜய் வெளியிட்டிருப்பது வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. ‘அப்பா மாதிரி அக்கா வனிதா விஜயகுமாரை கைவிட்டுட்டீங்களே பாஸ்’ என்று அருணை வலைதளவாசிகள் ஓட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வனிதா இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். வனிதா வெளியேறியது பலருக்கு சந்தோசம் தான் என்றாலும், அவர் பலருக்கு இல்லாமல் போனால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். மொத்தத்தில் அவர் பேசப்படும் டாபிக்காகவே இன்றுவரை இருந்து வருகிறார்.வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது முறை அறிந்த ஒன்று. இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. அதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்பே வனிதாவை அவரது குடும்பத்தினரே ஒதுக்கி வைத்து விட்டனர்.

Latest Videos

undefined

இந்த நிலையில் வனிதாவின் சகோதரரான நடிகர் அருண் விஜய் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரிகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இந்த புகைப்படத்தை வனிதா எங்கே என்று கமன்ட் செய்து வந்தனர். இதனால் இந்த புகைப்படத்திற்கு ரீ-ட்வீட் செய்துள்ள வனிதா, ’ட்விட்டர் என்னைத் தொடரும் மக்களே குடும்பம் என்னை மறந்த நிலையில் நீங்களாவது ஞாபகம் வைத்திருக்கிறீர்களே அதற்கு என் நன்றி’என்று பதிவிட்டுள்ளார்.
 

Thanks to all my tweeple family members for enquiring about me in the comments. it means a lot to me that atleast you remember me😭 https://t.co/zVdYvChnyC

— Vanitha Vijaykumar (@vanithavijayku1)

click me!