ஒரே நாளில் இத்தனை லட்சம் வியூஸ்களா?... தெறிக்கவிட்ட சிம்பு பட டீசர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 14, 2020, 07:41 PM IST
ஒரே நாளில் இத்தனை லட்சம் வியூஸ்களா?... தெறிக்கவிட்ட சிம்பு பட டீசர்...!

சுருக்கம்

அதன் படி இன்று ஈஸ்வரன் பட டீசர் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். தனது முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் ஸ்லிம்மாக ஜம்முன்னு தோன்றி அசத்தியிருக்கிறார் சிம்பு.  

சிட்டி பாயாக கலக்கி வந்த சிம்புவை தனது ஈஸ்வரன் படத்திற்காக முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராகவே சுசீந்திரன் மாற்றியிருக்கிறார். இந்த படத்திற்காக சிம்புவும் 101 கிலோ இருந்த உடல் எடையை குறைத்து சும்மா ஜிம்முன்னு மாறினார். சிம்புவின் சின்சியாரிட்டியை பார்த்த சுசீந்திரன் ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடித்து பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்.  அப்போது என்னது சிம்புவை வைத்து ஒரு மாசத்தில படத்தையே முடிக்க போறீங்களா? ஆசை இருக்கலாம் ஆனால் உங்களுக்கு பேராசை சார்!... என சுசீந்திரனை சோசியல் மீடியாவில் சிம்பு ஹேட்டர்ஸ் கலாய்த்தனர். 


ஆனால் சொன்ன மாதிரியே படு ஸ்பீடாக 33 நாட்களில் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார் சிம்பு. ஏன் டப்பிங் வேலையைக் கூட உடனே முடித்துக்கொடுத்துவிட்டு தான் மாநாடு ஷூட்டிங்கிற்கு சென்றார். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் இல்லாவிட்டால் எப்படி என்பதால், நவம்பர் 14ம் தேதி டீசர் வெளியாகும் என அறிவித்திருந்தனர். 

அதன் படி இன்று ஈஸ்வரன் பட டீசர் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். தனது முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் ஸ்லிம்மாக ஜம்முன்னு தோன்றி அசத்தியிருக்கிறார் சிம்பு.  நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய கெட்டப்பில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டீசர் வெளியாகி இன்னும் ஒரு நாள் கூட முழுதாக ஆகாத சமயத்தில் 2 மில்லியன் வியூஸ்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!
மகளுக்காக நடிகையை ஸ்கெட்ச் போட்டு கடத்திய தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு