அதிரடி சரவெடியாக பட்டையைக் கிளப்பும் “மாஸ்டர்” டீசர்... உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 14, 2020, 06:15 PM ISTUpdated : Nov 14, 2020, 06:28 PM IST
அதிரடி சரவெடியாக பட்டையைக் கிளப்பும்  “மாஸ்டர்” டீசர்... உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்...!

சுருக்கம்

தீபாவளிக்கு படத்தை தான் ரிலீஸ் பண்ணலா? டீசரையாவது ரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர்கள் லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்து வந்தனர். 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. 

தீபாவளிக்கு படத்தை தான் ரிலீஸ் பண்ணலா? டீசரையாவது ரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர்கள் லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அதிரடி சரவெடியாக மாஸ்டர் படத்தின் 1.30 நிமிட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை பார்க்கும் போதே விஜய் ‘ஜேடி’ என்ற பெயரில் பேராசிரியராக பட்டையைக் கிளப்பி இருப்பது தெரிகிறது. தீபாவளி விருந்தாக கிடைத்துள்ள டீசரை ரசிகர்கள் வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த டீசர்... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?