ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 27, 2020, 02:31 PM IST
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...!

சுருக்கம்

தற்போது சுசீந்திரனின் ஈஸ்வரன் பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. 

படத்தில் நடித்தாலும் சரி நடிக்காவிட்டாலும் சரி தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. சிம்பு - வெக்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக உள்ள இந்த கதைக்கு ஈஸ்வரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மாதவன் மீடியா தயாரிக்கும் இந்த படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக முதல் முறையாக ஜோடி சேருகிறார், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்த நிதி அகர்வால். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமையம் பாரதி ராஜா நடிக்க உள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி தாறுமாறு வைரலானது. 

 

இதையும் படிங்க: “ஆள் பாதி; ஆடை பாதி”... மிரள வைக்கும் லுக்கில் கவர்ச்சி அதிர்ச்சி கொடுத்த யாஷிகா...!

லாக்டவுனுக்கு முன்னதாக 100 கிலோ அளவிற்கு எடை கூடி இருந்த சிம்பு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சிம்புவின் லுக்கை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தான் மோஷன் போஸ்டர் வெளியானது. இருந்தாலும் ரீலுக்கும் ரியலுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?. தலைவனை நேரில் பார்த்தே ஆகனுன்னு அடம்பிடிக்கும் சிம்பு ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

தற்போது சுசீந்திரனின் ஈஸ்வரன் பட ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அங்கு குவிந்துள்ள தனது ரசிகர்களை பார்த்து சிம்பு கேரவனில் இருந்தபடியே கை அசைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்