
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் மட்டும் யாரும் எதிர்பார்க்காத விதமாக மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் அனிதாவும், சோம் சேகர், சுரேஷ், ரம்யா, ரியோ, நிஷா, வேல்முருகன், ஆஜித், பாலா , ஜித்தன் ரமேஷ், மற்றும் சனம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில், அனிதா சம்பத் பிக்பாஸ் அறையில் தேம்பி தேம்பி அழும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதிகம் தனிமையில் இருப்பது போல் தோன்றுகிறது. நான் எப்போதுமே மிகவும் ஜாலியாக இருக்கும் ஒரு நபர் என கூறி முகத்தில் கை வைத்து கொண்டு அனிதா அழுவது காட்டப்படுகிறது.
தொடர்ந்து பேசும் அவர் பிரச்சனை வந்தால் கூட தன் பக்கம் யாரும் நின்று பேசாதது போல் தோன்றுகிறது. பிடிச்சவங்க சொல்றத எடுத்துக்குறதா? அல்லது நாம நினைப்பதை எடுத்துக்குறதா என்று மனதிற்குள் ஒரு போராட்டம். மேலும் ஒரு நெகடிவ் பீல் மனதில் இருந்து கொண்டே உள்ளது தன் மேல் தான் நிறைய தவறு என்று தோன்றுகிறது என அனிதா அழுகிறார்.
இதுகுறித்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.