
கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த ஜூன் 18ம் தேதி காலமானார்.
இதையும் படிங்க: Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!
மலையாளத்தில் வெற்றி பெற்ற “அய்யப்பனும் கோஷியும்” தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார் - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏன் சகோதரர்களான சூர்யா - கார்த்தி கூட நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் கிளம்பின. ஆனால் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!
அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் உரிமை தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் படத்திற்கான அறிவிப்பு குறித்து எதுவும் வெளியாகாத நிலையில், தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து படக்குழு படப்பிடிப்பு தொடங்கு வேலையில் இறங்கிவிட்டது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.