முடிவுக்கு வந்த பாம்பு சர்ச்சை... வம்பில் இருந்து வெளியே வந்த சிம்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 24, 2020, 11:15 AM IST
முடிவுக்கு வந்த பாம்பு சர்ச்சை... வம்பில் இருந்து வெளியே வந்த சிம்பு...!

சுருக்கம்

இதனையடுத்து வனத்துறை படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

​சிம்பு ஈஸ்வரன் படப்பிடிப்பில்  நடுக்காட்டில் லுங்கியை தூக்கி கட்டிக்கொண்டு, மரக்கிளையில் தொங்கும் பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் போடுவது போன்ற காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த காட்சி வைரலான மறு கணமே சிம்பு பாம்பை துன்புறுத்திவிட்டார் என்றும், உரிய அனுமதி பெறாமல் உயிருடன் பாம்பை பயன்படுத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகின.

இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால், சட்டப்பிரிவு 1972ன் படி சிம்பு செய்தது குற்றம் என வன உயிரின ஆர்வலர்கள் புகார் அளித்திருந்தனர்.மேலும்  “ஈஸ்வரன் படத்தில் பாம்புகளை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றும், பாம்புகளை பயன்படுத்த அனுமதி கேட்கவில்லை” என்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் விளக்கமளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து படக்குழு சார்பில் இயக்குனர் சுசீந்திரன்,  பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டார். 

அதில், சிம்பு பாம்பை பிடித்து பையில் போடுவது போல் எடுக்கப்பட்ட அந்த காட்சி,  பிளாஸ்டிக்கால் ஆன போலியான பாம்பை பயன்படுத்தி எடுக்கப்பட்டது என்றும், அதை நிஜ பாம்பு போல் கிராபிக்ஸ் செய்ய இருந்ததாகவும், அதற்குள் அந்த வீடியோவை யாரோ வெளியிட்டு விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.மேலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினாலும் முறையான ஆதாரங்களுடன் விளக்கமளிப்போம் என்றும் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விலங்கு நல வாரியம் சின்புவின் 'ஈஸ்வரன்' பட குழுவினருக்கு கடந்த வாரம் பரபரப்பு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியிடும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.      

 

இதையும் படிங்க: பூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!

இதனையடுத்து வனத்துறை படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசனிடம் இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்தார். முதலில் பிளாஸ்டிக் பாம்பை வைத்து படப்பிடிப்பை நடத்தியதாகவும், அதன் பின்னர் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் நிஜ பாம்பு போல் மாற்றப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அது சம்பந்தமான வீடியோக்களையும்  காண்பித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட வனத்துறை அதிகாரி காட்சிகளுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!