#BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்... திரையுலகினர் இரங்கல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 23, 2020, 08:53 PM ISTUpdated : Nov 23, 2020, 09:13 PM IST
#BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்... திரையுலகினர் இரங்கல்...!

சுருக்கம்

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி மரணமடைந்தார்.

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கட்டுமஸ்தான தேகம், கணீர் குரல் என பல ரசிகர்களையும் கவர்ந்திழுத்த தவசி, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மொட்டை தலை, எலும்பும் தோலுமான தேகம் என பார்க்கவே பரிதாபமாக இருந்த தவசியை பார்த்து இவரா அவர்  என ரசிகர்கள் கண்கலங்கினர். அதுமட்டுமின்றி சிகிச்சை பணமின்றி தவித்த தவசி, மருத்துவ உதவி கோரினார். இதையடுத்து அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, ரஜினிகாந்த், சிம்பு, விஜய் சேதுபதி, ரோபா சங்கர் உள்ளிட்ட பலரும் நிதி உதவி வழங்கினர். 

உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக அவருக்கு இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் நான் நிச்சயம் பழைய மாதிரி மீண்டு வந்துவிடுவேன் என நம்பிக்கையுடன் தவசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தவசி, சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் பலரும் மிகுந்த வருத்தத்துடன் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!