“மேடையிலேயே கதறி அழுத சிம்பு...” ஆடியோ போட்டு அனைவரையும் அழவைத்த ஒரு சம்பவம்!

 
Published : Apr 30, 2018, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
“மேடையிலேயே கதறி அழுத சிம்பு...” ஆடியோ போட்டு அனைவரையும் அழவைத்த ஒரு சம்பவம்!

சுருக்கம்

simbu crying at zee tamil awards

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விருது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சிம்பு தன் தங்கை இலக்கியாவின் குரலை கேட்டுக் கண் கலங்கினார்.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பில் கலாட்டா விருதுகள் என்ற மாபெரும் விருது நிகழ்ச்சியொன்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா, அரசியல், சமூக சேவை, பத்திரிகை துறையை சார்ந்தவர்கள் என பல தரப்பு மக்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
இதில் நடிகர் கமல்ஹாசன், விக்ரம், சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்புவிற்கு “யூத் ஐகான் ஆப் தி இயர்” விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகர் விக்ரம் சிம்புக்கு வழங்கினார். இந்த விருதை வாங்கியதை அடுத்து  சிம்புவுக்கு சர்ப்ரைஸாக ஆடியோ ஒன்று ஒலிபரப்பப்பட்டது.

அந்த ஆடியோவில், சிம்புவின் தங்கை இலக்கியா பேசியிருந்தார். அதில், "யூத் ஐகான் விருது பெற்றதற்கு எனது வாழ்த்துகள் சிம்பு. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும் சினிமாவில் ஒரு நடிகராக சிம்பு இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் அவருடைய ரசிகர்கள். சிம்பு என்றாலே பிரச்சினை, கான்ட்ரவர்ஸின்னு எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால் சிம்பு ரொம்ப அன்பானவர், மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். எனக்கே 2,3 நபர்கள் சொல்லித்தான் அண்ணா அவர்களுக்கு உதவினார் என்பதே தெரியும்.

அண்ணா நீ கவலைப்படாதே, நீ யாரென்று கடவுளுக்குத் தெரியும். நாங்கள் எல்லோரும் உன் கூடவே எப்பொழுதும் இருப்போம்" என்று பேசியிருந்தார். தங்கையின் குரலைக் கேட்டு  கண் கலங்கிய சிம்பு, "எனக்கு தங்கையாக பிறந்ததுக்கு அவளுக்கு நான் தான் நான் நன்றி சொல்லணும். அந்தக் கடவுளுக்கு என் நன்றி" என்கிற வார்த்தைகளால் தன் ஒட்டுமொத்த அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் இந்த சிம்புவின் தங்கை கண்கலங்க வைத்துவிட்டார்.

தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்துவருகின்றனர். கடந்த மூன்று வருடங்களாகப் படம் எதுவும் நடிக்காமல் இருந்தபோதும், அவருக்கான ரசிகர்கள் மட்டும் குறைந்தபாடில்லை. எனவே, எப்போதும் ரசிகர்கள்தான் எனக்கு மிகப் பெரிய பலம் என்று சிம்பு அடிக்கடி பொது மேடைகளில் கூறுவதுண்டு. ரசிகர்களுக்கு அடுத்து அவரது மனதுக்கு நெருக்கமானவர் என்றால் அது அவரது தங்கை இலக்கியாதான். சிம்புவின் தங்கை இலக்கியா கடந்த பிப்ரவரி 2014இல் அபிலேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்கை குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தார் என்பது குறுப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?