கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேலே ஏமாற்றிய தயாரிப்பாளர்கள்... வெளியில் சொல்லாத விஜய்சேதுபதி!

 
Published : Apr 30, 2018, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேலே ஏமாற்றிய தயாரிப்பாளர்கள்... வெளியில் சொல்லாத விஜய்சேதுபதி!

சுருக்கம்

Who will settle that 20 crores burstout Vijai Sethubathy

‘மக்கள் செல்வன்’ எனும் மாஸ் டைட்டிலை சூடிக் கொள்வதற்கு விஜய்சேதுபதி கொடுத்திருக்கும் விலை மிகப்பெரியது! காசு கொடுத்து இந்த பட்டத்தை அவர் வாங்கிடவில்லை, காசு இழந்து வாங்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

குழப்பமாக இருக்கிறதா...தொடர்ந்து வாசியுங்கள் புரியும். 
குறுகிய காலத்திற்குள் மளமளவென பல படங்களைக் கொடுத்து, அதில் கணிசமானவற்றை மரண மாஸாக ஹிட்டடிக்க வைத்த பெருமைக்குரியவர் விஜய்சேதுபதி. ஏகப்பட்ட படங்களில் நடிப்பதால், ஏகத்துக்கும் சம்பாதித்து தள்ளுகிறார்! என்று நீங்கள் நினைத்தால் அது மெகா தவறு. காரணம், மனிதருக்கு இருக்கும் ‘நிலுவை சம்பள’த்தின் நீளம் அசாதாராண நீளமுடையது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய ஸ்கீமினை கொண்டு வந்திருக்கிறது. அதாவது ‘படப்பிடிப்பு துவங்கும் முன்பாக ஹீரோவுக்கு, சம்பளத்தில் பத்து பர்சென்ட்  அட்வான்ஸாக கொடுக்கப்படும். மீதியெல்லாம் படம் முடிஞ்ச பிறகே தரப்படும்.’ என்பதுதான் அது. 

இந்த திட்டத்தைப் பற்றி ஆலோசிக்க ஹீரோக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது சங்கம். விஜய்சேதுபதியும், சிம்புவும் மட்டும் கலந்திருக்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய விஜய்சேதுபதி ‘சினிமா உருவாக்கத்தால் ஹீரோ மட்டுமே பிழைக்க கூடாது, தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லாரும் வாழணும்! அப்படிங்கிற உங்க பிளான் நல்லாதானிருக்குது. ஆனால் யதார்த்தத்தையும் கொஞ்சம் யோசிங்க. 

கரெக்டா அக்ரிமெண்ட் போட்டு, எழுபத்தஞ்சு சதவித சம்பளத்தை முன்கூட்டியே வாங்குறப்பவே ஒவ்வொரு பட நிறுவனமும் எனக்கு குறைஞ்சது ஒரு கோடியாவது பாக்கி வெச்சிருக்காங்க. அந்த வகையிலேயே கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேலே வரவேண்டியிருக்குது. சூழ்நிலை இப்படியிருக்கிறப்ப பத்து சதவீதத்தை மட்டும் முதல்ல வாங்கிட்டு, மீதியை படம் முடிஞ்ச பிறகு வாங்கிக்கன்னு நீங்க சொல்றதை எப்படி ஏத்துக்குறது? மீதியை கரெக்டா செட்டில் பண்ணுவாங்கன்னு என்ன நம்பிக்கை வைக்க முடியும்? ஆனா இந்த கடுப்பையெல்லாம் மனசுக்குள்ளே வெச்சுக்கிட்டு ரசிகர்களுக்காகத்தான் அடுத்தடுத்து படம் கமிட் ஆகுறேன்.இல்லேன்னா பொட்டியை கட்டிட்டு சொந்த ஊருக்கு போயிடுவேன். அதை செஞ்சுடவா?” என்று நறுக்கென கேட்டாராம். 


இப்போது புரிகிறதா ரசிகர்கள் எனும் மக்களுக்காக படம் பண்ணும் ஒரு கலைஞன் தான் விஜய் சேதுபதி! என்பது.

இந்நிலையில் ஹீரோக்களின் சம்பளம் குறித்து புது திட்டம் போட்டு மீசையை முறுக்கியவர்கள் முகம் கவிழ்த்துக் கொண்டார்களாம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!