பனீர் மஷ்ரூம்... சமையலிலும் அசத்திய சிம்பு..! வைரலாகும் த்ரோ பேக் வீடியோ..!

Published : Jul 02, 2021, 11:49 AM IST
பனீர் மஷ்ரூம்... சமையலிலும் அசத்திய சிம்பு..! வைரலாகும் த்ரோ பேக் வீடியோ..!

சுருக்கம்

சிம்பு பனீர் மஷ்ரூம் செய்து சமையலில் அசத்தும் த்ரோ பேக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  

நடிகர் சிம்பு அடுத்த படங்களில் நடிப்பதில் செம்ம பிசியாகி இருக்கிறார். குறிப்பாக, இவர் உடல் எடையை குறைத்த பின்னர் நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு,  கே எல் பிரவீண் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர். உடையலங்காரம் மற்றும் ஸ்டைலிங் ஏரியாவை மெருகூட்டியுள்ளார் வாசுகி பாஸ்கர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் லிரிகள் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படமும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தற்போது... சிம்பு பனீர் மஷ்ரூம் செய்து சமையலில் அசத்தும் த்ரோ பேக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த வீடியோ இதோ... 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!