தலைவர் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி..! 'அண்ணாத்த' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

By manimegalai aFirst Published Jul 1, 2021, 6:58 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டு, தலைவர் ரசிகர்களுக்கு இந்த வருடம் இரட்டை தீபாவளி என்பதை உறுதி செய்துள்ளது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டு, தலைவர் ரசிகர்களுக்கு இந்த வருடம் இரட்டை தீபாவளி என்பதை உறுதி செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதல் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்க பட்டு தலைவர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படக்குழுவிற்கு குட் பை சொல்லிவிட்டு தனி விமானத்தில் சென்னை திரும்பினார். படப்பிடிப்பு முடிந்த பின்னர், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு, அண்மையில் தான்... முழு உடல் பரிசோதனைக்காக மத்திய அரசின் அனுமதியோடு தனி விமானம் மூலம் மனைவி லதா ரஜினிகாந்துடன் அமெரிக்கா பறந்தார்.

தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை நலமாக உள்ளதாக பிரபலங்கள் சில கூறி வரும் நிலையிலும், அவ்வப்போது அவர் மருத்துவமனை அருகே நடந்து வரும் புகைப்படம் மற்றும், ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் மீண்டும் துவங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் திரையரங்குகளுக்கு, கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டிருக்க அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வருட தீபாவளியை மேலும் சிறப்பாக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் வெளியாகும் என்பதை படக்குழு உறுதி செய்து, இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதாவது நவம்பர் மாதம் 4 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை செம்ம குஷியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . 

click me!