ஆரம்பமே பட்டையக் கிளப்பும் ‘கேஜிஎஃப் 2’... ஆடியோ ரைட்ஸ் விற்பனை மட்டும் இத்தனை கோடியா?

By Kanimozhi PannerselvamFirst Published Jul 1, 2021, 6:42 PM IST
Highlights

இன்று  ‘கேஜிஎஃப் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. 2018ம் ஆண்டு கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2 எடுக்கப்பட்டது.

யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’  டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது. மேலும்  வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா 2வது அலையால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் செப்டம்பர் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த நிலையில், இன்று  ‘கேஜிஎஃப் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. ‘கேஜிஎஃப் 2’ தயாரிப்பாளர் விஜய் கிர்கண்டுவுடன் லஹரி மியூசிக் நிறுவனத்தினர் ஆடியோ உரிமைத்தை பெற்ற ஒப்பந்தத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

click me!