சிங்கள் அப்டேட்டுக்கு காத்திருந்த தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்! வேற லெவல் கொண்டாட்டம் தான்!

By manimegalai aFirst Published Jul 1, 2021, 3:34 PM IST
Highlights

சிங்கள் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விரைவில் டபுள் விருந்து கார்த்திருக்கிறதாம் இது குறித்து புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

தல அஜித், நடிப்பில் கடைசியாக வெளியான 'நேர்கொண்ட பார்வை' தாறுமாறு ஹிட் அடித்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் இரண்டாவது முறையாக தல இணைந்து, நடித்து வரும் 'வலிமை' படத்தில் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்யாத அக்கப்போரு இல்லை. சிங்கள் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விரைவில் டபுள் விருந்து கார்த்திருக்கிறதாம் இது குறித்து புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: இன்று முதல் சென்னையில் துவங்குகிறது 'பீஸ்ட்' படப்பிடிப்பு..!
 

தல அஜித்துக்கு எந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை அவரது படம் குறித்த ஏதாவது தகவல் வெளியாகும் போதும் , அவரது படத்தின் ரிலீஸின் போதும் பலரும் பார்த்திருப்பார்கள். குறிப்பாக இவருக்கு சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்கள் இவரது ரசிகர்கள் தான். எனவே ரசிகர்களோடு ரசிகர்களாக சேர்ந்து இவர்களும் 'வலிமை' படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்கள். 

மேலும் செய்திகள்: 'பீஸ்ட்' படத்திற்காக படு ஹாட்டாக சென்னை வந்து இறங்கிய பூஜா ஹெக்டே..! வைரலாகும் போட்டோஸ்..!
 

அஜித்தின் பிறந்தநாளில் 'ஃபர்ஸ்ட் லுக்' வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கும் கடைசியில் கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால் ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் தற்போது கொரோனா தாக்கம் தமிழகத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதால் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலை படக்குழு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..! தீவிர சிகிச்சை..!
 

மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'வலிமை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமன்றி மோஷன் போஸ்டரும் தயாராகி விட்டதாகவும் எனவே தல ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட் கொடுப்பது போல் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த தகவலை அஜித் ரசிகர்கள் வேறு லெவலில் கொண்டாடி வருகிறார்கள்.


 

click me!