
இந்த ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற 'திரிஷ்யம் 2 ' படம் திரையரங்குகளில் இன்று முதல் ரிலீசாகி உள்ளது. இது குறித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘திரிஷ்யம்’ 2 திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது பாகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகசிறந்த எடுத்து காட்டு என 'திரிஷ்யம் 2 ' படத்தை பல சினிமா விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளினர். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்தை ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் 'திரிஷ்யம் 2 ' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு பதிலாக திரையரங்கில் வெளியாகி இருந்தால், வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்திருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களின் இந்த ஆசையை நிறைவேற்றுவது போல், 'திரிஷ்யம் 2 ' திரைப்படம் வெளிநாடுகளில் இன்று முதல் திரையரங்கில் வெளியாக உள்ளதாக நடிகர் மோகன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில், ஐக்கிய அரபு நாடுகளான எமிரேட், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவித்து, எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். அரபு நாடுகளில் நடிகர் மோகன் லாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், இன்று முதல் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.