பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..! தீவிர சிகிச்சை..!

Published : Jul 01, 2021, 11:46 AM IST
பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..! தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் நசீருதீன் ஷா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மேலாளர் உறுதிப்படுத்தினார்.   

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் நசீருதீன் ஷா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரது மேலாளர் உறுதிப்படுத்தினார். 

மேலும் செய்திகள்: நான் அப்படி சொல்லவே இல்லையே... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி!
 

மும்பையில் உள்ள  இந்துஜா மருத்துவமனையில் நசீருதீன் ஷா, கடந்த  இரண்டு நாட்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். "அவரது நுரையீரலில் பிரச்சனை ஏற்படவே, அவரை உடனடியாக மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். தற்போது நசீருதீன் ஷா உடல்நிலை சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பு தருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நசீருதீன் ஷாவின் மனைவி ரத்னா பதக் ஷா மற்றும் அவரது பிள்ளைகள் பக்கத்திலேயே இருந்து அவரை கவனித்து கொண்டு வருகிறார்கள். இவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: டல் மேக்அப்... செம்ம ஸ்டைலிஷாக ரெட் குயின் போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
 

நசீருதீன் ஷா, கடந்த 1970 ஆம் ஆண்டு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா அண்ட் ஃபிலிம் மற்றும் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் (எஃப்.டி.ஐ.ஐ) ஆகியவற்றில் படித்துவிட்டு, 70 மற்றும் 80 களில் இந்திய புதிய அலை சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். "நிஷாந்த்", "ஜானே பீ தோ யாரோ", "இஜாசாத்", "பஜார்", "கதா", "மசூம்" மற்றும் "மிர்ச் மசாலா" ஆகிய படங்களில் மிகவும் நுணுக்கமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றவர். குறிப்பாக  "தி டர்டி பிக்சர்" படம் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு