தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு... 5 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

By manimegalai aFirst Published Jun 30, 2021, 8:06 PM IST
Highlights

அண்மையில், தியாகராஜ பாகவரின் பேரன் சென்னை தலைமை செயலகத்தில், உள்ள முதலமைச்சர் தனி பிரிவிற்கு வைத்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிதி உதவி மற்றும் குறைந்த வாடகை குடியிருப்புக்கு வழங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 

அண்மையில், தியாகராஜ பாகவரின் பேரன் சென்னை தலைமை செயலகத்தில், உள்ள முதலமைச்சர் தனி பிரிவிற்கு வைத்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிதி உதவி மற்றும் குறைந்த வாடகை குடியிருப்புக்கு வழங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டவர் எம்.கே.தியாகராஜ பாகவர், செல்வ செழிப்புடன் வாழ்ந்த இவரது வாரிசுகள் தபோது ஏழ்மையில் பிடியில் இருக்கின்றனர். இந்நிலையில் தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் என்பவர் முதல்வருக்கு மனு ஒன்றை கொடுத்தார். 

அதில் எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 2 மனைவிகள் இருந்தனர். 2-வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார். தற்போது ஏழ்மையால் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அண்ணனுடைய வீட்டில் தான் வசித்து வருவதாகவும், தங்கையின் கணவரும் இறந்து விட்டார் அவர்களது பிள்ளைகளை வளர்ப்பதற்கு கூட மிகவும் கஷ்டமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

புகைப்பட கலைஞராகவும், வீடியோ படம் பிடிப்பவராகவும் இருக்கும் சாய் ராமின் தொழிலும் தற்போது கொரோனா காலம் என்பதால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், எனவே தற்போது செக்யூரிட்டி மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருவதாகவும் இவர் கூறியது கேட்பவர்கள் நெஞ்சையே உறையவைத்தது. மேலும் எங்களால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டு வசதி வாரியத்தில் அரசு எங்களுக்கு ஒரு வீட்டை ஒதுக்கினால் அனைவருமே அங்கேயே வசிப்போம். எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும் என கூறியிருந்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் முக ஸ்டாலின் வாடகை குறைவான வீடு மற்றும் ரூபாய் 5  லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... "எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள், தமிழ் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக,  தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக 1944 ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமாக அக்காலகட்டத்தில் விளங்கிய திரு.எம்.கே தியாகராஜ பாகவதர் அவர்களின், மகள் வழி பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மிகவும் வறிய நிலையில் குடியிருக்க வீடு இன்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சாய்ராம் அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது வழங்க ஆணையிட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!