விஜய் சேதுபதியை தொடர்ந்து குக்கிங் ஷோவில் தொகுப்பாளராக களமிறங்கும் ரோபோ ஷங்கர்..!

Published : Jun 30, 2021, 07:16 PM ISTUpdated : Jun 30, 2021, 07:27 PM IST
விஜய் சேதுபதியை தொடர்ந்து குக்கிங் ஷோவில் தொகுப்பாளராக களமிறங்கும் ரோபோ ஷங்கர்..!

சுருக்கம்

தற்போது ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ ஒன்றும் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஆனதில் இருந்தே, குக்கிங் நிகழ்ச்சிகளை நடத்துவதில் பல தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் கூட, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும், 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ ஒன்றும் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன. அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி  "பொங்குறோம் திங்கிறோம்"  குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இந்த  சமையல் நிகழ்ச்சியை நடத்த நிகழ்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு   மலேசியாவில் நடைபெற உள்ளது,  மலேசியாவில் மலேசிய உணவுகளைப்பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள். இந்த  'பொங்குறோம் திங்கிறோம்' நிகழ்ச்சிக்கு  கிரேஷ்கருணாஸ் மற்றும்  சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில்  அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சிவா,  சாய், ரஞ்சித், இந்திரஜாரோபோசங்கர், சாய், போட்டியளர்களாக பங்குபெறுகின்றனர். நகைச்சுவையோடு , விதவிதமான உணவுவகைகளையும் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது  'பொங்குறோம் திங்கிறோம்'. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்