கடன் பெற்று தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

Published : Jun 30, 2021, 06:51 PM IST
கடன் பெற்று தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

சுருக்கம்

நடிகரும், தயாரிப்பாளருமான, ஆர்.கே.சுரேஷ் ரூ .10 கோடி பணம் பெற்று தருவதாக கூறி, ரூபாய் 1 கோடி மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் வீணா என்பவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நடிகரும், தயாரிப்பாளருமான, ஆர்.கே.சுரேஷ் ரூ .10 கோடி பணம் பெற்று தருவதாக கூறி, ரூபாய் 1 கோடி மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் வீணா என்பவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பின்னர் நடிகராகவும் மாறியவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - வீணா தம்பதிகளிடம் ரூபாய் 1 கோடி, பெற்று மோசடி செய்துள்ளதாக வீணா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் கூறியுள்ளதாவது, தாங்கள் நடத்தி வந்த கனரக வாகனம் வாடகைக்கு விடும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வங்கிகளிடம் கடன் கேட்டு சென்னையில் உள்ள கமலக்கண்ணன் என்பவரை அணுகி உள்ளனர். இவர் ரூபாய் 10 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான, ஆர்.கே.சுரேஷை ராமமூர்த்தி - வீணா ஆகியோருக்கு  அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கியில் ரூபாய் 10 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷனாக 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட இந்த தம்பதிகள் 93 லட்சத்தை, ஆர்கே சுரேஷ் வங்கி கணக்கில் செலுத்தியதுடன், ரூபாய் 7 லட்சம் ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்துள்ளனர். அதன் பின்னர் இருவரையும் வளசரவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் வங்கிக்கு அழைத்து சென்ற ஆர்கே சுரேஷ் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். நிரப்பப்படாத காசோலைகளிலும் ஆர்.கே.சுரேஷ் மற்றும் வீணா தம்பதியரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். 

பின்னர் வங்கி மேலாளர், நீங்கள் கடனாக கேட்டுள்ள ரூபாய் 10 கோடி படம் இன்னும் சில நாட்களில் உங்களது வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் என கூறியுள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் பணம் வந்து சேர்ந்த பாடு இல்லை. இதனால் மீண்டும் ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராமமூர்த்தி தம்பதிகள் அவர்களை அணுகியபோது, கொடுத்த பணம் எல்லாம் தர முடியாது... உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என மிரட்டும் தொனியில் கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆர்கே சுரேஷ் அவரது வீட்டை இந்த தம்பதிகளுக்கு விற்பனை செய்தது போல பத்திரம் பதிவு செய்து அதை வங்கியில் வைத்து பணம் பெற்றுக் கொண்டு தங்களையும் மாற்றியதாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக ராமமூர்த்தி இறந்து விட்டதாகவும் அவரது மனைவி வீணா குற்றம்சாட்டி உள்ளார். தங்களுக்கு தர வேண்டிய ரூபாய் ஒரு கோடி பணத்தை கொடுக்க கூறி பல முறை ஆர்.கே.சுரேஷை அணுகியும் எந்த பயனும் இல்லை என்றும், தங்களது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும், கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கபாடகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!