நான் அப்படி சொல்லவே இல்லையே... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி!

By manimegalai aFirst Published Jul 1, 2021, 11:05 AM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவிற்கு மறுப்பு தெரிவிப்பது போல் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் நேற்று பரபரப்பு பதிவு ஒன்றை போட்ட நிலையில், இதுகுறித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை கஸ்தூரி கொடுத்துள்ளார்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவிற்கு மறுப்பு தெரிவிப்பது போல் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் நேற்று பரபரப்பு பதிவு ஒன்றை போட்ட நிலையில், இதுகுறித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை கஸ்தூரி கொடுத்துள்ளார்.

மனதில் பட்ட கேள்விகளை தயக்கம் இன்றி எழுப்பி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் நடிகை கஸ்தூரி. அந்த வகையில், அண்மையில் ரஜினிகாந்த் உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றது குறித்து தன்னுடைய மனதில் பட்ட கேள்விகளை எழுப்பி, இதற்க்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவர் எழுப்பிய கேள்விகள் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்திய நிலையில், நெட்டிசன்கள் சிலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து, கஸ்தூரி போட்ட மற்றொரு பதிவில்... "அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி  ! நாரதர் கலகம்  நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி-  நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! " என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது. இவரது இந்த பதிவிற்கு பின்னர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இவரை தொடர்பு கொண்டு விளக்கம் கூறியதாக செய்திகள் பரவியது.

எனவே ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ்... நேற்றைய தினம் திடீர் என கஸ்தூரியை டேக் செய்து,  "தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம். என்று தெரிவித்திருந்தார். எனவே கஸ்தூரி பொய் கூறினாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

இந்நிலையில், கஸ்தூரி ரியாஸின் பதிலுக்கு தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில்... "திரு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் என்னுடன் பேசியதாக என்னுடைய ட்விட்டரில் நான் கூறவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டியதை, நான் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து சில விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டேன். அதன் காரணமாகவே... உற்சாகத்தை வெளிப்படுத்தி பதிவு போட்டதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் கஸ்தூரி கூறியதும் பொய் இல்லை, அதே நேரத்தில் ரஜினிக்காத குடும்பத்தினரும் விளக்கம் கொடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 


 

No tweet of mine claimed that Mr Rajinikanth's family spoke to me. What you have quoted only expresses my excitement on learning some details from someone I trusted. Thanks for the clarification anyways. It says a lot that this was the one tweet that was refuted. https://t.co/w4gDCvWK5q

— Kasturi Shankar (@KasthuriShankar)

 

click me!