சிம்பு ரசிகர்களை கட்சிக்குள்  இழுக்கிறாரா டி.ஆர்....??? சந்தேகத்தை ஏற்படுத்திய பேச்சு...!!!

 
Published : Jan 28, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
சிம்பு ரசிகர்களை கட்சிக்குள்  இழுக்கிறாரா டி.ஆர்....??? சந்தேகத்தை ஏற்படுத்திய பேச்சு...!!!

சுருக்கம்

தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனர் , பாடகர் என பல முகங்களை கொண்ட  டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். 

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கான  தடையை நீக்க வேண்டும் என சிம்பு முன்வந்த போது மகனுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தெரிவித்து இனி கட்சி பணிகளில் தீவிரம் காட்ட போவதாக தெரிவித்தார். 

இந்நிலையில்  ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘என் மகன் சிம்பு ஒரு தமிழன் என்கிற உணர்வோடு ஜல்லிக்கட்டுக்காக போராடி ஏற்படுத்திய எழுச்சி இது என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழர்களுக்காக நாங்கள் களத்தில் இறங்க இருக்கின்றோம், விரைவில் பிரமாண்ட மாநாடு ஒன்று நடத்த உள்ளேன் என்றும் கூறியுள்ளார் .

அந்த மாநாட்டில்  சிம்பு ரசிகர்களின் கூட்டத்தை பாருங்கள் ’ என அவர் கூறியுள்ளார், இவரது பேச்சு கட்சியை வளர்ப்பதற்கு பேசுவது போல் உள்ளது என பலர் சமூக வலை தளத்தில் கூறி வருகின்றனர். 

மேலும் சிம்பு தனக்கு அரசியல் மீது துளியும் ஆர்வம் இல்லை என கூறி வரும் நிலையில் டி.ஆர்.ருடைய  இந்த செயலுக்கு  சிம்பு சம்மதித்தாரா? என்பது சந்தேகம் தான் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!