
'சிந்து சமவெளி, 'பொறியாளன்', 'வில் அம்பு' படங்களில் நடித்த ஹரீஷ் கல்யாண் விஜய் டிவி நடத்திய சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கடைசி போட்டியாளராக 6௦ நாட்களுக்குப்பின் ஹரீஷ் கல்யாண் கலந்து கொண்டாலும் உண்மையாக நடந்து கொண்ட விதம் மற்றும் அவரது ரசிக்கும்படியான நடவடிக்கைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.விளைவு
இறுதிப்போட்டியாளரில் ஒருவராக சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோருடன் ஹரீஷ் கல்யாணும் இணைந்தார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் 2-வது ரன்னர் அப் பட்டமும் ஹரீஷ் கல்யாணுக்குக் கிடைத்தது.பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது சிம்பு போல பேசி, நடனமாடி தான் ஒரு சிம்பு ரசிகன் என ஹரீஷ் நிரூபித்தார்.இதனால் சிம்பு ரசிகர்களின் பெருவாரியான ஆதரவு ஹரிஷுக்குக் கிடைத்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் முடிந்து கடந்த வாரம் வெளியே வந்த ஹரீஷ் சமீபத்தில் சிம்புவை சந்தித்து உரையாடினார்.இந்த சந்திப்பின்போது தொடங்கிய இடத்தை மறவாதே என தனது கைப்பட எழுதி கையொப்பம் இட்ட ஆங்கிலபுத்தகம் ஒன்றை ஹரீஷ்க்கு அன்புப்பரிசாக சிம்பு அளித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹரீஷ், பிக்பாஸ் வீட்டினுள் இருந்தபோது தனக்கு ஆதரவளித்த சிம்பு ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.