
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டு சிம்பு ரசிகர்களை உட்சாகப்படுத்தியுள்ளனர்.
சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இறுதி கட்ட பணிகளும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தின் ’மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெட்கட் பிரபு இன்று காலை 11 :25 மணிக்கு மாநாடு குறித்த முக்கிய தகவல் வெளியாக உள்ளது என அறிவித்திருந்தார். கண்டிப்பாக ரிலீஸ் தேதி குறித்த தகவலாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சிம்பு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டு, இந்த வருட தீபாவலிமையை இரட்டை தீபாவளியாக மாற்றியுள்ளனர் படக்குழுவினர். எனவே இம்முறை சிம்பு நடிகர் ரஜினிகாந்துடன் மோத உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.