'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்ட நடிகர் விஷால்!!

Published : Sep 11, 2021, 11:34 AM IST
'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்ட நடிகர் விஷால்!!

சுருக்கம்

நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை, நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை, நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் அடுத்தடுத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில்,  'எனிமி' மற்றும் 'துப்பறிவாளன் 2 ' என இரண்டு ஆக்ஷன் படங்களை தன் கையில் வைத்துள்ள விஷால், தன்னுடைய 31 ஆவது படத்தை, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அப்போது ஆக்ஷன் காட்சிகளை தத்ரூபமாக படமாக்க பல்வேறு ரிஸ்க் எடுத்து விஷால் நடித்திருந்தார். இதுகுறித்த காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. மேலும் விஷாலுக்கும் சில லேசான அடிகள் ஏற்பட்டது. பின்னர் 'எனிமி' படத்தின் பணிக்காக சிறு இடைவெளி விட்ட விஷால் மீண்டும் இந்த படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

விரைவில் 'வீரமே வாகை சூடும்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!