
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் திடீர் விபத்தில் சிக்கி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய் தரம் தேஜ், பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஆகியோருக்கு நெருங்கிய உறவினரும் ஆவார். இவர் நேற்று இரவு, தன்னுடைய சொகுசு பைக்கில் ஹைதராபாத் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, இவரை கடந்து சென்ற வெளிநாட்டு ஆடம்பர கார் ஒன்று எதிர்பாராத விதமாக இவரை உரசி விட்டு சென்றது.
இதன் காரணமாக தடுமாறி கீழே விழுந்த சாய் தரம் தேஜுக்கு, கை, இடுப்பு, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் இவர் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் தலையில் காயம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. உடனடியாக இவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்த பின்னர், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.
இவரது விபத்து குறித்த தகவல் வெளியானதும், சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் பலர் தொடர்ந்து அப்பலோ மருத்துவமனைக்கு விரைந்து, இவரது உடல் நலம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக்குழுவினர் இவரை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி, பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. அந்த காட்சிகள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.