தொடங்குது ஓங்கார கூத்து! பொறி பறக்கும் பச் டயலாக்... ராயல் என்பீல்டில் அருவாவோடு கெத்து காட்டும் 'அண்ணாத்த'!!

Published : Sep 10, 2021, 06:37 PM ISTUpdated : Sep 10, 2021, 06:47 PM IST
தொடங்குது ஓங்கார கூத்து! பொறி பறக்கும் பச் டயலாக்... ராயல் என்பீல்டில் அருவாவோடு கெத்து காட்டும் 'அண்ணாத்த'!!

சுருக்கம்

இன்று காலை அண்ணாத்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இதை தொடர்ந்து... தற்போது வெறித்தனமான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.  

இன்று காலை அண்ணாத்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இதை தொடர்ந்து... தற்போது வெறித்தனமான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகியது. இதில் தலைவர் செம்ம ஜாலி மூடில், பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலித்தார். மேலும் ஒரே திருவிழா கொண்ட்டாட்டம் போல், மிகவும் கலர் ஃபுல்லாக அமைந்திருந்தது.  பக்கா பேமிலி என்டர்டெயின்மென்ட் படம் என்பதை இந்த போஸ்டர் உணர்த்தியது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,  சதீஷ், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் மேக்ஸிமம் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், டப்பிங் மாதிரியான போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் மற்றும் இசை கோர்ப்பு பணிகள் போன்ற போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

அண்ணாத்த படத்தின் அப்பேட் வெளியாகி பல நாட்கள் ஆன நிலையில், நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் பற்றிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்க்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்திருந்தது. அதன்படி அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் ஈவினிங் 6 மணிக்கும் வெளியாகும் என்று கூறி இருந்தது. 

இந்நிலையில் சற்று முன்னர் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மோஷன் போஸ்டர், வெறித்தனமாக வெளியிலாகியுள்ளது. எடுத்ததுமே... 'நாடி நரம்பு முழுக்க முழுக்க.... ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க... அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க... தொடங்குது ஓங்கார கூத்து... என பஞ்சு டயலாக் பேசியுள்ளார். பின்னர் கையில் அருவாளோடு, ராயல் என் பீல்டு வண்டியில் இவர் கொடுக்கும் என்ட்ரி வேற லெவல். இமானின் இசை இந்த அண்ணாத்த மோஷன் போஸ்டருக்கே உயிர் கொடுக்கும் விதத்தில் அமைத்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ